Categories
உலக செய்திகள்

“நரியாக மாறிய நாய்!”.. குழம்பிப்போன தம்பதி.. அதன்பின் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

பெரு நாட்டில் ஒரு தம்பதி, பல வருடங்களாக நாய் என்று கருதி நரியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருவில் வசிக்கும் மரிபெல் சோடெலோ நபரும், அவரின் மனைவியும் நாயை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். எனவே, மரிபெல் சோடெலோ ஒரு கடைக்குச் சென்று நாய்க்குட்டி ஒன்றை   13 டாலர் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அந்த கடைக்காரர் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்குட்டி இது என்று கூறியிருக்கிறார்.

இத்தம்பதியும் நாய்க்குட்டிக்கு “ரன் ரன்” என்று பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளனர்.  நாட்கள் செல்லச் செல்ல, நாய்க்குட்டி அருகிலிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் கொன்று தின்றுள்ளது. மேலும், அதன் காதுகள் நரியின் காதுகளை போன்று மாறிவிட்டது. இது மட்டுமல்லாமல், “ரன் ரன்”, சில நாட்களுக்கு முன்பாக, சாலையில் சென்றுகொண்டிருந்த 3 பன்றிகளை கொன்று தின்றுள்ளது.

ஆறு மாதங்கள் கடந்த பின்பு தான், அத்தம்பதிக்கு நாய் என்று நினைத்து நரியை வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. உண்மை தெரிந்தவுடன் அதிர்ந்து போன தம்பதி, உடனடியாக நரியை கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |