காட் மேன் வெப்சீரிஸ் இணை இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காட் மேன் வெப்சீரிஸ் ட்ரைலரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பாக பிஜேபி உள்பட அமைப்பினர் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது, அதே போல அந்த வசனங்களை நீக்க வேண்டும் . இந்த வெப் சீரிஸ் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு புகார் கொடுக்கப்படது.
அதே போல 5 புகார்களும் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்திருந்தது. இந்த நிலையில் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காட்மேன் வெப்சீரிஸ் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் அதேபோல தயாரிப்பாளர் இளங்கோ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆஜராக மூன்றாம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர்.