Categories
மாநில செய்திகள்

குடிசை வாழ் மக்களே… நாளை முதல்… 3 வேளை… பிரீ பிரீ பிரீ..!!

குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்கள் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். தேவையான உதவிகளை மக்களுக்கு செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

Categories

Tech |