Categories
உலக செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு எப்போது தடுப்பூசி..? பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு வரும் மே 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருக்கிறது.

பிரான்சின் பிரதமர் Jean Castex நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமானோருக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசு, தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவாக  நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போதுவரை நாட்டில் சுமார் 21 மில்லியன் நபர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது.

இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 32% ஆகும். இதுமட்டுமல்லாமல் சுமார் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |