கொரோனா முடிவுகளை எளிதில் கண்டறியும் வகையில் ஒரு சோதனை கிட்டை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
கிளாஸ்கோவில் இருக்கும் Strathclyde என்ற பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் அமைப்பு சுமார் பதினைந்து நிமிடங்களில் கொரோனா முடிவுகள் வெளியாகும் வகையில் ஒரு சோதனை கிட்டை கண்டறிந்துள்ளார்கள். அதாவது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை உடனடியாக கண்டறியும் glucose test strips ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டத்தை தொடங்கியதாக கூறியுள்ளார்கள்.
அதாவது ஒருவரின் எச்சில் துளியை இதனுள் செலுத்த வேண்டும். அதன் பின்பு சுமார் 15 நிமிடங்களில் கொரோனா முடிவுகள் வெளிவந்துவிடும். மேலும் இதற்கான செலவு 16 செண்டுகள் தான். இன்னும் இரண்டு வருடங்களில் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.