அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையிலிருந்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பு விகிதங்களை மீண்டும் குறைப்பதற்காக இந்த் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா பரவல் குறையும் வரை இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில், தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது. அப்போது கலிபோர்னியாவிலும் கடும் விதிகள் பின்பற்றப்பட்டது. தற்போது வரை மொத்த மக்களில் 51% பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் 52% பேர் செலுத்திக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.