சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.ஸ்.சி மருத்துவமனையில் ஒய்வு பெற்ற காவல் உதவியாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்ற முதியவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.