சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இலங்கை பரவியுள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றது.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தி , உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அடுத்தடுத்து என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் சவாலாக பார்க்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு தள்ளியுள்ளது. சீனாவில்நேற்றைய நிலவரப்படி இந்த கொடூர வைரஸால் பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.மேலும் சீனா முழுவதும் இந்த வைரஸால் 1300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்கே இந்த வைரஸ் நம்முடைய நாட்டிற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல உலக நாடுகள் விமான நிலையம் தொடங்கி பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் இருந்து வரும் விமானங்கள் , பயணிகள் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயதுடைய சீனப் பெண் ஒருவருக்கு ஜனவரி 25ஆம் தேதி இலங்கை விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் போது இந்த கொரோனா வைரசால் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடாத் சுரவீரா உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் சீனப்பயணிகளுக்கு இலங்கை வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இந்தியா பரவி விடுமோ என்ற அச்சம் இருந்த நிலையில் தற்போது இலங்கையில் இருந்து இந்தியா_வுக்கு விரைவாக பரவி விடுமோ என்ற சோகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.