சீனாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. ஆனால் சீனா, சில மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 57 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவில் குறைவான எண்ணிக்கையில் தான் கொரோனா தொற்று உள்ளது.