கனடாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு தடுப்பு மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் colchicine என்ற மருந்து கொரோனா நோய்க்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த colchicine மருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்து. எனவே இது மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு என்று மொன்றியல் மருத்துவமனை கூறியுள்ளது.
மேலும் இந்த ஆய்வில் colchicine மருந்து மூலம் கொரோனாவால் ஏற்படும் மரணம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 21 % குறைதந்துள்ளது. கனடா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள 4448 கொரோனா நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு இந்த colchicine மருந்து கொடுத்த போது 25 %நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்படுவது தவிர்க்கப்பட்டது.
மேலும் 50% கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வைக்கப்படும் தேவையும் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் ஏற்படும் 44 % மரணம் தவிற்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.