வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். மாவட்ட நிர்வாகம் இறப்பை உறுதி செய்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.