சீனாவில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வூகான் மாகாணத்தில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், சீனா முழுவதும் ஒரு சில வாரங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 81.08 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் கடந்த 50 நாட்களாக சீனாவில் புதிய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தன. இதனால் சீனாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. சீனாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர். இதனால் சீனாவில் கொரோனா 2ம் அலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்த பெய்ஜிங்கில் உள்ள ஸின்ஃபாடி உணவுச் சந்தை மூடப்பட்டுள்ளது.