கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது 189 நாடுகளில் பரவி உள்ளது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்திருந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசினார். அதில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதோடு கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக ஒருமாதம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்து சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.