உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,25457 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,19,312ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,683ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 21,16,580 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,879 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,820 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 8,29,902 ஆக உயர்ந்துள்ளதுள்ளது.
ரஷ்யாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,11,423 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8,987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,715 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். ஈரானில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,905 பேருக்கு உறுதியானதால் இதுவரை பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,75,927ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,305 ஆக உயர்ந்துள்ளது. 32,223 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 1,25,933 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனோரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,305ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 34,223 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் கொரோனோவால் 29,374 பேர் உயிரிழந்துள்ளனர்.