உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,11,510ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,94,730ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,000ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,45,399 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,906 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,151 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 31,197 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 7,42,084 ஆக உயர்ந்துள்ளதுள்ளது. மேலும் 38,497 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,85,253 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8,595 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,142 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர்.
ஈரானில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,905 பேருக்கு உறுதியானதால் இதுவரை பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,75,927ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,89,046ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 1,08,317 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.