தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூரில் ஒரே நாளில் புதிதாக 188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் – 95, காஞ்சிபுரம் – 45, திருவள்ளூர் – 34, மதுரை- 20, திருவண்ணாமலை – 17, செங்கல்பட்டு – 9, திண்டுக்கல் – 9, வேலூர் -6 , விழுப்புரம் – 5, பெரம்பலூர் – 3, கிருஷ்ணகிரி – 2, புதுக்கோட்டை – 2, தேனி – 2, தூத்துக்குடி – 2, கரூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,78,472 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 31,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஆண்கள் பேரும், பெண்கள் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 35,418 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இதுவரை 36.59% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.