பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் அதிகமான உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.