திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று புதிதாக கொரோனா பாதித்த 59 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும், பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுகின்றனர் எனவும் சுகாதாரத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும், இதன் காரணமாக திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.