இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் டர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
Hello @RishabhPant17, great to have you back 😀#TeamIndia pic.twitter.com/aHYcRfhsLy
— BCCI (@BCCI) July 21, 2021
இந்த நிலையில் கடந்த வாரம் இந்திய அணியின் பேட்ஸ்மேனும்,விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்ற ‘நெகட்டிவ் ‘முடிவு வந்துள்ளது. இதனால் ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.