Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீள இதை தான் செய்தோம் – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை.

 

 

எனக்கும் அதிக சளி, காய்ச்சல், மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. மேலும் எனது மேலாளரும் இதே நிலையில் இருந்தார். நாங்கள் மூன்று பேரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஒரு வாரத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டி விட்டோம். தற்போது நலமாக இருக்கிறோம். மேலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என விஷால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |