கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சில நாட்களிலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஸில் உள்ள கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்- ஹெலன். இத்தம்பதியருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 3 பிள்ளைகளும் 5 பேரன், பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜானிற்கும் அவரது மனைவி ஹெலனிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. இந்நிலையில் ஜான் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர் இறந்த அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி ஹெலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஜான்-ஹெலன் தம்பதியினர் உண்மையான காதலுக்கு மிகச் சிறந்த சான்றாக திகழ்ந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.