Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது….”ஷாருக்கான் கொடுத்த தைரியம்”….! மனம் திறந்த ‘வருண் சக்கரவர்த்தி’…!!!

14வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

14வது ஐபில் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான வருண்  சக்கரவர்த்திக்கு, முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சென்னை , டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில் முதலில் பாதிக்கப்பட்ட வருண்  சக்கரவர்த்தி 2 வாரத்திற்கும் மேலாக   சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,  தற்போது குணமடைந்து  சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தொற்றால்  பாதிக்கப்பட்டதை குறித்து வருண்  சக்கரவர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, நமக்கு முதலில்  கொரோனா தொற்று  உறுதியானால், அது நம்மை மொத்தமாக மாற்றி விடும்.

குறிப்பாக தனிமையை உணர வைக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன். குடும்பத்தினர் மற்றும் அணி வீரர்களுடன் இல்லாமல் தனிமையில் இருந்தேன். ஆனால் சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளேன் என்று கூறினார். நான் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ,கொல்கத்தா அணி நிர்வாகம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அத்துடன் என்னை நன்கு கவனித்துக் கொள்வதற்காக, ஒருவரை நியமித்து இருந்தனர். சிகிச்சைக்குப் பின் 2  முறை பரிசோதனை செய்ததில், ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகுதான், என்னை பத்திரமாக சொந்த ஊருக்கு  அனுப்பி வைத்தனர். இதில் முக்கியமாக கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் எனக்கும் அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் அவர் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்தார் , என்று வருண் சக்கரவர்த்தி கூறினார்.

Categories

Tech |