கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ,கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனக்கு லேசான அறிகுறியுடன் ,கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இல்லை என தெரிய வந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதோடு தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் ,பரிசோதனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக, சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக தலைமை தாங்கினார். சச்சினை தொடர்ந்து, இந்திய அணியில் விளையாடிய யூசுப் பதான் , இர்பான்பதான் மற்றும் பத்ரிநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்று ஏற்பட்டு ,6 நாட்களுக்கு பின், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி அவர் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கொரோனா தொற்றால் முன்னெச்சரிக்கைகாக ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்னும் சில நாட்களுக்குள் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்தார். அனைத்து மக்களும் உடல்நலனில் கவனம் செலுத்தி பாதுகாப்புடன் இருங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு, இந்திய அணி உலக கோப்பை வென்று சாதனை படைத்த 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ,ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.