கொரானா வைரஸ் பாதிப்பை முழுமையாக குணப்படுத்த ஸின்ஜி_ விர்_ ஹச் என்ற ஆயுர்வேத மாத்திரை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கபட்டுள்ளதாக, கேரளாவை சேர்ந்த பிரபல மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள பங்கஜகஸ்தூரி மூலிகை ஆராய்ச்சி நிலைய மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தாங்கள் கண்டுபிடித்துள்ள ஸின்ஜி_ விர்_ ஹச் ஆயுர் வேத மாத்திரை கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் என்று அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர். இந்த மாத்திரைக்கு அரசின் உரிமம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி சென்டர் பயோ டெக்னாலஜி, திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆர் மையங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஸின்ஜி_ விர்_ ஹச் மாத்திரை பாதுகாப்பானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பங்கஜகஸ்தூரி மூலிகை ஆராய்ச்சி நிலையம் மருத்துவர் ஹரேந்திரன் கூறியுள்ளார்.