கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன.
உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை.
நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா என்பதை கண்டறியும். ஆண்டிபாடிக் டெஸ்ட் என்பது கொரோனாவுடன் எதிர்த்துப் போராடும் எதிரிகள் உடலில் இருக்கிறதா என்பதையும் கண்டறியும். இந்த எதிரிகள் உருவாவதால் தான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கொரோனா குணமடைந்த பிறகு இவை நம் உடலில் அப்படியே இருக்கும். மீண்டும் அந்த நோய் வராமல் தடுக்கும்.
அதன்படி ஆன்டிபாடி உடலில் இருக்கிறது என்றால் ஒன்று கொரோனா தொற்று இருக்க வேண்டும் அல்லது தொற்று குணமாகி இருக்க வேண்டும். ஆண்டிபாடி டெஸ்ட் மூலம் மட்டுமே கொரோனா இருக்கிறதா.? இல்லையா.? என்பதை உறுதியாக அறிய முடியாது என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். பின்னர் ஏன் ஒரு லட்சம் ஆன்டிபாடி சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.
இந்த சோதனைகளை மின்னல் வேகத்தில் செய்ய முடியும் என்பது முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இதற்கு பெரிய ஆய்வு கூடமும் ரசாயனம் தேவையில்லை. சாதாரணமாக வீட்டிலேயோ அல்லது பொது இடங்களிளோ கூட செய்யமுடியும். இதுவரை நாம் பின்பற்றும் RT-PCR முறையில் முடிவுகள் வர இரண்டு நாட்கள் வரை ஆகலாம்.
ஆனால் ஆன்டிபாடி ராபின் டெஸ்ட் முறையில் 15 முதல் 30 நிமிடங்கள் நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். அதிக அளவு மக்களை குறைந்த காலத்தில் சோதனை செய்ய முடியும் என கூறப்படுகிறது. அதிகம் பேருக்கு தொற்று பரவும் சூழல்களில் இதை பயன்படுத்தலாம் என்று ICMR பரிந்துரை செய்துள்ளது. உதாரணத்திற்கு வேளச்சேரி மாலில் வேலை செய்தவருக்கு கொரோனா என்றால் அங்கு வேலை செய்த அனைவருக்கும் எளிதில் இந்த சோதனை செய்து விடலாம்.
ஆனால் இது மட்டுமே போதாது ஆன்டிபாடி டெஸ்டில் பாசிட்டிவ் என்று வந்தால் அவரை கொரோனா தொற்றுக்கு வாய்ப்புள்ள நபர் என்று கருத வேண்டும் என்கிறது ICMR. அவரை தனிமைப்படுத்தி, சிகிச்சை வழங்கி அடுத்த நிலையில் அவருக்கு RT-PCR டெஸ்ட் செய்யப்படலாம். இதன் மூலம் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் PCR டெஸ்ட் செய்யலாம்.
அனைவருக்கும் செய்வதன் மூலம் ஆகும் நேர விரயத்தை குறைக்கலாம். ஒருவேளை சோதனையில் ஆன்டிபாடி இல்லை என்றால் பத்து நாட்கள் தனிமையில் இருக்க வைத்து மீண்டும் சோதனை செய்ய வேண்டும். அப்போதும் இல்லை என்று முடிவு வந்தால் தான். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யமுடியும். நோயின் ஆரம்ப நிலைகளில் ஆன்டிபாடிகள் உருவாகாமல் இருக்கலாம்.
என்பதை உணர்ந்து 10 நாள் இடைவெளியில் இரண்டு சோதனைகள் அவசியம் என்று ICMR அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சோதனை செய்யப்படுபவரின் அளவு மிகக் குறைவு என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய சோதனை கருவிகள் அந்த குறையை நீக்க பெரும்உதவியாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் கூறினார்கள்.