Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.36.34 கோடி நிதி கிடைத்துள்ளது – தமிழக அரசு தகவல்!

கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,34,2,529 நிவாரண நிதி கிடைத்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும் , டிடிவி தினகரன் ரூ. 1 கோடி, தமிழக ஆளுநர் ரூ. 1 கோடியும் அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது வரை கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.36.34 கோடி நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |