Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.

 

மூலிகை மருந்து கொரோனா வைரஸ்சை கட்டுப் படுத்தப் படுகிறதா ? என்று அந்தந்த நாட்டு சுகாதாரத்துறை தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிவிடலாம் என்பதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வீட்டில் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்திய பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான ரசம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசத்துக்கு இயல்பாகவே இருக்கும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையை அறிந்த சிங்கப்பூர் ரசத்தை மக்கள் அருந்துமாறு பல்வேறு இடங்களில் விளம்பர பதாகை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Image result for கொரோனா ரசம்

இந்தியர்கள் 5000 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ரசம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ,  நோயை விரட்டி விடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ரசத்தை அதிகமாகி உணவை உட்கொள்வார்கள். இந்த ரசத்தில் பூண்டு , மிளகு ,  மஞ்சள் , சீரகம் அனைத்தும் இருப்பதால் இது உடலின் செரிமானத்திற்கு சிறந்தது.

 

மேலும் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுடன் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரசத்தில் விட்டமின் , மினரல்கள் ஏராளமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து , நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால் சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்கள் பலரும் தங்களது தொழிலாளர்களுக்கு ரசத்தை கொடுத்து வருகின்றனர். அங்கு இருக்கும் சீனர்கள் தமிழர்களிடம் ரசத்தை எப்படி செய்வது என்பதை கேட்டறிந்து , கொரோனா வைரஸில் இருந்து விடுபடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |