Categories
தேசிய செய்திகள்

9 நாள் தான் ஆச்சு…. குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா… ம.பி.யில். அதிர்ச்சி …!!

பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது  அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், கடந்த சில நாட்களாக பரவலாக பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடிய நோய் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் பிறந்த குழந்தைகளையும் தாக்குகிறது. பிறந்து 9 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேசம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 11ஆம் தேதி குழந்தை பிறந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

Categories

Tech |