Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் வீசிய விவகாரம்… 3 பேர் பணியிடைநீக்கம்..!!

புதுச்சேரியில் கோரோவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர்.

வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே வந்த போது, குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல் சடலத்தை வீசி விட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவாக இணையத்தில் வைரலானது. சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை அறிக்கை வந்தபின்பு, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யாராகஇருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், யாரையும் விட்டு வைக்கமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |