Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 6565 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 3 வாரத்தில் கடந்த ஒரு வார காலமாக ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் காரணமாக ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஏப்ரல்.30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா-வில் 13 பேருக்கும், ஜெய்ப்பூரில் 65 பேருக்கும், டாங்க் பகுதியில் 18 பேருக்கும், கோட்ட பகுதியில் 14 பேருக்கும், கரவுலி மற்றும் ஜைசால்மர் பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |