Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா …!!

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்தார். இன்று பாதிக்கப்பட்டுள்ள 77 பேரில் அதிகபட்சமாக கோவையில் 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கோவையில் 60 பேராக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 86ஆக அதிகரித்துள்ளது. கொண்ட வைரஸ் பாதிப்பு ஆளாகியிருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |