Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா..!!

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 20 காவலர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், கோடம்பாக்கத்தில் 3,409 பேர், திரு.வி.க நகரில் 2,922 பேர், அண்ணா நகரில் 3150 பேர், தேனாம்பேட்டையில் 3,844 பேர்,தண்டையார் பேட்டையில் 4,082 பேர், வளசரவாக்கத்தில் 1,395 பேர், அடையாறு மண்டலத்தில் 1,809 பேர், திருவொற்றியூரில் 1,171 பேர் என 9 மண்டலங்களில் பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் முன் களப்பணியாளர்கள் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள், செவிலியரைகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பரவியது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |