தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 8 பேரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில் 10 மாத குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவிதித்தார்.
மேலும் தமிழகத்தில் 43538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், இதனால் கொரோனா தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.