Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி.. சிகிச்சையில் 162 பேர்..!!

புதுச்சேரியில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகளை மூட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டன.

Categories

Tech |