கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களில் மட்டும் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 65 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,006 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,846 பேர் உள்ளனர்.
இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர், மலப்புரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 13, எர்ணாகுளம் மாவட்டத்தில் 9, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 7, வயநாடு 5, பத்தனம்திட்டா 4, இடுகி மற்றும் காசராகோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று கொரோனா பாதித்தவர்களில் 91 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். 48 பேர் பிற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் ஆவர். குவைத் – 50, சவுதி அரேபியா – 15, யுஏஇ – 14, கத்தார் – 6, ஓமான் 4, இலங்கை 1, இத்தாலி 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா – 15, டெல்லி – 11, தமிழ்நாடு 10, ஹரியானா – 6, கர்நாடகா – 2, உத்தரபிரதேசம் – 1, தெலுங்கானா – 1, ஜம்மு-காஷ்மீர் – 1 மற்றும் மத்திய பிரதேசம் 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.