Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை அயனாவரம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேலும் இன்று காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழுஊரடங்குக்கு பிறகாவது கொரோனாவில் இருந்து சென்னை மீளுமா? என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Categories

Tech |