திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக 113 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,945 ஆக அதிகரித்திருந்தது. குறிப்பாக ஏற்று நேற்று மட்டும் இங்கு 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,000த்தை கடந்தது.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்றுவரை 1001 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1114 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா காரணமாக எண்ணிக்கை 50,000த்தை தாண்டியது. அதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.