தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 11,381 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,007 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 அரசு மற்றும் 23 தனியார் மையங்கள் என மொத்தம் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.