கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில், குவைத் -23, யுஏஇ -12, கத்தார் -5, ஓமான் -3, சவுதி அரேபியா -2, பஹ்ரைன் -1 மற்றும் தஜிகிஸ்தான் -1 என 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, பிற மாநிலங்களில் இருந்து வந்த 26 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா -13, தமிழ்நாடு -5, டெல்லி -3, வங்காளம் -2, கர்நாடகா -1, குஜராத் -1 மற்றும் ஒடிசா -1 என 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு மூலம் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், மலப்புரம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று மட்டும் 60 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1,234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,542 ஆக இருந்த நிலையில், இன்று 2,621 ஆக அதிகரித்துள்ளது.