தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் 2 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,215 ஆக இருந்தது.
மேலும் நேற்றுவரை கொரோனாவில் இருந்து 600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து 603 பேர் நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 658 ஆக அதகரித்துள்ளது. மேலும், இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.