கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சரிடம் கேட்டு அறிகிறார். மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஏப்., 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த வாரம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனை ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 14க்கு பிறகு எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.