Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: திருச்சியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு …!!

கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார்.  அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் விரைவில் குணமடைந்து  வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது அவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும். தொடர்ந்து மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  திருச்சியை சேர்ந்தவர்கள் 13 பேரும், அரியலூர் சேர்ந்த 2 பேரும், விமானம் மற்றும் இரயில் மூலமாக வந்தவர்கள் என சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது திருச்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |