வேலூரில் இன்று ஒரே நாளில் 3 நீதிபதிகள் உள்பட அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 1,241 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 286 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 951 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 3 நீதிபதிகள் உள்பட129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 56 பேர் நேதாஜி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள். மீதமுள்ள நபர்கள் அனைவரும் சி.எம்.சி பணியாளர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.