Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பல் குவிந்தால் கொரோனா பரவாது – திருமாவளவன் கிண்டல்

மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், உயர்நீதிமன்றத் #தடைக்குத் தடை. மதுக்கடைகளைத் திறக்க #உச்சநீநிமன்றம் ஆணை. ‘கும்பல்குவிந்தால் கொரோனாபரவாது’என #அறிவியல் பூர்வமாக உச்சநீதி மன்றமும் தமிழகஅரசும் உறுதிசெய்து விட்டனவோ? அப்படியென்றால் தேசிய அளவில் #முழுஅடைப்பை ஏன் நீட்டிக்கவேண்டும்? #மோடிக்குத் தெரியாதோ? #SupremeCourt என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |