மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உணரப்பட்டதால் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியாவில் விமான நிலையங்களில் நடைபெறக்கூடிய சோதனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.இதையடுத்து கொரோனா வைரஸ் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்ற அறிவுறுத்தலையும் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் பல்வேறு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு துறைகளும் மாநில அரசுடன் இணைந்து செயல்படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். இந்நிலையில் சார்ஜா மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என டீன் வினிதா தெரிவித்துள்ளார்.