கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9% ஆக உள்ளது என்று இது மிக குறைவு எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 2,328 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திரு.வி.க நகரில் 412, கோடம்பாக்கம் மணடலத்தில் 387, ராயபுரத்தில் 375, அண்ணா நகரில் 191, தேனாம்பேட்டையில் – 285, தண்டையார் பேட்டையில் -168, வளசரவாக்கத்தில்- 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா தோற்று பகுதிகளில் எந்தவித வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.