மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனாவுக்கு 1,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது.
மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.