Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1242 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |