தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்தபடியாக கொரோனவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்து, 27 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம் தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது.