தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10875ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தோற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதால பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 50 பேர் குணமடைந்துள்ளனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.